அதிமுக பொதுக்குழு வானகரத்தில் காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இபிஎஸ் புறப்பட்டார். இந்த முறை இபிஎஸ் பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத்தலைமையாக வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் 90%க்கும் அதிகமானோரின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறும் இரட்டை தலைமை தொடர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த சலசலப்பால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு பொதுக்குழு நடைபெற உள்ளது. பொதுக்குழுவில் கலந்துகொள்ள முன்னதாகவே தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். சென்றமுறை பன்னீர் செல்வம் பிரச்சார வாகனத்தில் பொதுக்குழுவுக்கு வந்தார். இந்நிலையில் இந்த முறை எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் பொதுக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். பன்னீர் செல்வத்தின் வீடு இருக்கும் சாலை தவித்துவிட்டு மாற்று வழியை அவர் தேர்வு செய்துள்ளார். டிடிகே சாலை வழியாக எடப்பாடி பழனிசாமி வானகரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil