அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கிய நிலையில், இன்று (ஜூலை 8) காலை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/eps-1-2025-07-08-10-21-04.jpg)
அதன்படி, எடப்பாடி பழனிசாமியுடன், எஸ்.பி. வேலுமணியும் உடன் இருந்தார். அப்போது, கோவை கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/eps-2-2025-07-08-10-21-30.jpg)
அந்த வகையில், 2024-25 நிதியாண்டில் உபரி வருவாய் கிடைத்த நிலையிலும், தி.மு.க அரசு கடன் வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/eps-3-2025-07-08-10-21-44.jpg)
அ.தி.மு.க ஆட்சியின்போது அனைத்து அணைகளிலும் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். ஆனால், தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததும் அணைகள் புனரமைக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/eps-4-2025-07-08-10-21-54.jpg)
தேர்தல் அறிக்கையின்படி 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக தி.மு.க அரசு வாக்குறுதி அளித்தது என்பதை எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் 50,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியின்படி தி.மு.க நிறைவேற்றவில்லை என அவர் கடுமையாக விமர்சித்தார்.