பிப்ரவரி 5 முதல் 10 வரை அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது என்று இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கை ”18வது நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு , அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தொரு தேர்தல் என்றாலும் மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன.
அதேபோன்றே, சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களை கணக்கில் எடுத்து தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை சென்னை, சேலம், வேலூர், விழுப்புரம், நெல்லை, திருச்சி, கோவை, தஞ்சவூர், மதுரை ஆகிய 9 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது “ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil