ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நடைபெற்று முடிந்த பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வெளியாகிய பின், இன்று பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழைய மன கசப்பை மறந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலா, தினகரனுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடார்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது : ”ஓபிஎஸ் அழைப்பு விடுப்பார். யார் தர்ம யுத்தம் செய்தது. நான் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று அழைத்தபோது அவர்தான் தர்ம யுத்தம் செய்தார். அவருக்கு பதவி வேண்டும். அவரால் பதவியில்லாமல் இருக்க முடியாது. அவரிடம் உழைப்பு கிடையாது. அவரது மகனுக்கு பதவி உயர்வு வேண்டும். 2017ல் எப்படி பொதுக்குழு கூட்டினோமோ அதுபோல் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று நினைத்தோம். இவர் ஏன் அதற்கு வரவில்லை. ஏன் நீதிமன்றம் போய்க்கொண்டே இருக்கிறார்.
பொதுக்குழு நடக்கும்போது, ஆட்களை வேன்களில் கூட்டி வந்து. அலுவலகத்தின் பிரதான கதை உடைக்கிறார். அவருக்கு காவல்துறையினர் துணையாக இருந்தனர். இது அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. அதிமுகவின் முக்கியமான ஆவணங்களை திருடி சென்றிருக்கிறார். கட்சி வாகனத்தை அடித்து நொறுக்குகிறார். இவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும். எடப்பாடி பழசாமி இல்லையென்றால் பொறுப்பேற்க வேறு யாரோ வருவார்கள். ஆனால் நான் எனக்காக பார்க்கவில்லை , அனைவருக்காகவும் யோசிக்கிறேன். 2021 சட்டமன்ற தேர்தலில் என்னை முதல்வராக அனைவரும் அறிவித்தனர். ஆனால் அவர் அதற்கு ஒற்றுக்கொள்ளவில்லை. 15 நாட்கள் இந்த சிக்கல் நீண்டது. இதனால் 3 % வாக்குகளை அதிமுக இழந்தது. இவரால்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. இதுபோலவே எதிர்கட்சி தலைவராக என்னை தேர்வு செய்தபோது என்னை அவர் ஆதரிக்கவில்லை. இதுவும் செய்தியாக ஊடங்களில் வெளிவந்தது.
நான் எப்போதும் சொந்தக் காலில் நிற்க விரும்பியவன். கட்சிக்கு சோதனையான காலத்தில் உண்மையான விஸ்வாசத்துடன் செயல்பட்டவன். 1989 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக தேர்தல் பணியாற்றியவர் ஓபிஎஸ். தொண்டர்கள் பலம் அவருக்கு இருந்தால் பொதுக்குழுவில் அதை நிரூபிக்கலாமே. பொதுக்குழு நடக்கும்போது தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர் அவர்தான். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக காவல்துறைக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். அதிமுக பொதுக்குழுவுக்கு தடைபெற நீதிமன்றம் சென்றார். ஒருங்கிணைப்பாளரே பொதுக்குழுவுக்கு தடை ஆணை வாகுவது சரியா?” என்று கூறியுள்ளார்