scorecardresearch

‘அம்மா கோவிலில் வேண்டினேன்; அவர் கொடுத்த அருள் இது’: உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி இ.பி.எஸ் பேச்சு

அம்மா கோவில் தெய்வ பக்தியோடு இருக்கும் கோவில். அங்கே ஜெயலலிதாவும், எம்ஜிஆர்-ரும் அருள் கொடுத்தார்கள். சில நிமிடங்களிலே அருமையான திர்ப்பு வந்தது- இ.பி.எஸ்

‘அம்மா கோவிலில் வேண்டினேன்; அவர் கொடுத்த அருள் இது’: உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி இ.பி.எஸ் பேச்சு

” தீர்ப்பை நினைத்து இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை, உதட்டில் மட்டுமே சிரிப்பு இருந்தது உள்ளத்தில் இல்லை”  என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும்  என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்சநீதிமன்றம்  தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு  விவகாரத்தில் ஓ. பன்னீர் செல்வம்  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக மதுரையில் இ.பிஎ.ஸ் பேசியுள்ளார். “ தீர்ப்பை எண்ணி எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை. அதிகமானோர் தொலைபேசியில் அழைத்து விசாரித்தார்கள். நமது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். ஒரு நல்ல செய்தி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். தீர்ப்பு குறித்த அச்சத்தால் எனது உதட்டில்தான் சிரிப்பு இருந்தது உள்ளத்தில் இல்லை. உதயகுமார்  அம்மாவுக்கு இங்கே  கோவில் கட்டியுள்ளார்.  

அம்மா கோவிக்கு சென்று ஜெயலாலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை  அணிவுத்துவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்று அவர் கூறினார். என்னோடு வந்திருந்த அனைவரும் அங்கே செல்லலாம் என்று கூறினார்கள். அங்கு சென்ற போது நான் வேண்டிக்கொண்டேன்  51 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறும் இந்நாளில் நான் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று கேட்டேன். அம்மா கோவில் தெய்வ பக்தியோடு இருக்கும் கோவில். அங்கே ஜெயலலிதாவும், எம்ஜிஆர்-ரும் அருள் கொடுத்தார்கள். சில நிமிடங்களிலே அருமையான திர்ப்பு வந்தது. அது இரண்டு தெய்வங்கள் கொடுத்த வரம் “ என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Edappadi palanisamy says jayalalitha and mgr blessing is the reason for supreme court verdict