Advertisment

கள்ளச் சாராயத்திற்கு இதுவரை 9 பேர் பலி; ஸ்டாலின் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்: இ.பி.எஸ்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
இ.பி.எஸ்

இ.பி.எஸ்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா  செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் விமர்சித்துள்ளார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது போல செங்கல்பட்டில்  5 பேர் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக இ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

” விழுப்புரம் மரக்காணம் அருகே சாரயம் குடித்து  9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. இதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் சாராயம் பருகி உயிரிழந்துள்ளனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது.  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று நான் முன்பே அறிக்கை மூலம் எச்சரித்திருந்தேன்.

மேலும் சில பத்திரிகைகளிலும் கள்ளச் சாராயம் தொடர்பான செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை இந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை.  ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆழ்கின்ற காரணத்தால், இப்படிபட்ட கொடுமைகளை மக்கள் சந்திக்க வேண்டியதாக உள்ளது. கள்ளச்சாரயம் பெருகி உள்ளது என்று சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நான் பேசியிருந்தேன். இதையெல்லாம் அரசு கவனித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

கள்ளாச்சாரயம் விற்பனை நடைபெறுகிறது என்ற செய்திகள் பத்திரிக்கையில் வெளிவந்தன. இதற்கு  பொறுப்பு ஏற்று  முதல்வர் ஸ்டாலின் பதவியை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்டாலின் ஆட்சி செய்யத்தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. இதுபோல கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு டி.ஜி.பி 2.0 என்று அறிவித்தார். பிறகு, 3.0 மற்றும் 4.0 என்று அறிவித்தார். ’ஓ’ போடுவதைதான் அவர்கள் வழக்காமாக வைத்துள்ளனர். ஆனால்  எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. அவர்களால் போதை பொருட்களை தடை செய்ய முடியவில்லை. காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதி கிடையாது. தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். நாளை காலை மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க உள்ளேன். அம்மா ஆட்சி இருக்குவரை குறிப்பிட்ட நேரம் வரைக்கும்தான் மதுக் கடைகள் திறக்கப்படும். ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் 24 மணி நேரமும் பார் திறக்கப்படுகிறது. திமுக அரசுக்கு வருமானம்தான் தேவை.

500 மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு, 1000 மதுக்கடைகளை திறக்கிறார்கள். சிறிய கடைகளாக திறக்கிறார்கள். மேலும் தானியங்கி மூலம் மது விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது திமுக அரசு. திருமண மண்டபத்திலும் கூட குடிக்கலாம் என்ற உத்தரவை அரசு கொண்டுவந்துள்ளது. ஒரு மகிழ்ச்சியான நாளில்கூட குடிக்கலாம் என்று கூறுகிறார்கள் “ என்று அவர் கூறினார்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment