scorecardresearch

தமிழக சட்டம் ஒழுங்கு; திங்கட்கிழமை பேரணியாக சென்று ஆளுனரிடம் மனு: இ.பி.எஸ் அறிவிப்பு

திமுக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வரும் 22ம் தேதி ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளிக்க உள்ளார்.

திங்கட்கிழமை பேரணியாக சென்று ஆளுனரிடம் மனு
திங்கட்கிழமை பேரணியாக சென்று ஆளுனரிடம் மனு

திமுக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வரும் 22ம் தேதி ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளிக்க உள்ளார்.

திமுக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக 22ம் தேதி ஆளுநரை சந்தித்து இ.பி.எஸ் மனு அளிக்க உள்ளார். இதை பேரணியாக நடந்து சென்று செய்கிறார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

” திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

திமுக அட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அதிமுக சார்பில் வரும் 22ம் தேதி காலை 10.25 மணிக்கு, சென்னை, சின்னமலை, தாலுகா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகில் இருந்து, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

இந்த பேரணியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளும்னற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.  ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Edappadi palanisamy to meet governor on 22nd may about allegation on dmk government

Best of Express