அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (ஜன.24,2024) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “திமுகவின் இளைஞரணி மாநாட்டில் ஒரு தீர்மாளம் கூட மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை; நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் வாக்குறுதி நாடகம்” என்றார்.
தொடர்ந்துப் பேசிய அவர், “அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட இயக்கம். திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகன்- மருமகள் மீது தங்கள் வீட்டுக்கு பணிக்கு வந்த பட்டியலின மாணவியை கொடுமைப்படுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் திமுக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. நீட் தேர்வு விவகாரத்தில், நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவேன் என மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் வாக்குறுதி நாடகங்களுள் ஒன்று. அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டியதால் மக்கள் அவதிப்படுகின்றனர்” என்றார்.
தொடர்ந்து கோவில் பற்றி குறிப்பிடுகையில், “கோவிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால்எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும்;
அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“