New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/16/8kJyuhetQ8oRt9LCKbtQ.jpg)
அ.தி.மு.க சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) நடைபெற்றது.
அ.தி.மு.க சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) நடைபெற்றது.
அ.தி.மு.க சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “கோட்டையிலே இருக்கின்றவர்களை வீட்டுக்கு அனுப்புகிற கூட்டம் இந்த கூட்டம். வேலூர் கோட்டையிலே இருக்கின்ற அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி புறப்பட்டுவிட்டார்கள். 234 தொகுதிகளிலும் வென்று அதிமுக ஆட்சியை நிறுவுவதற்காக என் முன்னே இந்த இளைஞர் பட்டாளம் இருக்கிறார்கள். தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரை தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டபோது, இன்றைக்கு இருப்பது போல அன்றைக்கு இளைஞர் பட்டாளம் எம்.ஜி.ஆர் பின்னால் சென்றதால் எல்லா தேர்தல்களிலும் வென்றார்கள்.
ஸ்டாலின் வெளியே செல்கிறபோது இளைஞர்கள் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள் என்று கூறுகிறார். புதுசா கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கள் கேட்கிறார்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் துன்புறுத்தும்போது, அப்பா, அப்பா என்று கதறும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? 3 வயது சிறுமியில் இருந்து பள்ளியிலே படிக்கிற சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளகிறபோது, கதறுகிற சத்தம் ஸ்டாலினுக்கு கேட்கவில்லை. அப்பா, அப்பா என கதறுகிறதே அந்த சத்தத்துக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
ஜனவரி முதல் 14.02.2025 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2 மாதத்தில் இவ்வளவு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த கதறல் சத்தம், அப்பா, அப்பா என்று கதறுகிற சத்தம் ஸ்டாலின் செவிக்கு எட்டவில்லையா?
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது, பிரதமர் சென்னைக்கு வந்தார். அப்போது கருப்பு பலூன் விட்டார். கோபேக் மோடி என்று சொன்னார். ஆட்சிக்கு வந்தார் ஸ்டாலின், இப்போது வெல்கம் மோடி என்கிறார். ஊழல் குற்றச்சாட்டு பயத்தில், வெல்கம் மோடி என்கிறார். வெள்ளைக் குடை பிடிக்கிறார். ஸ்டாலினுக்கு வெள்ளைக்குடை வேந்தர் என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்.
ஸ்டாலின் அங்கம் வகித்த இந்தியா கூட்டணி, இன்றைக்கு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கல் உண்மையாக அந்த கூட்டணியை நேசிக்கவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
ஸ்டாலின் ஒரு பக்கம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். மறுபக்கம், மத்திய அமைச்சரை அழைத்து வந்து கருணாநிதியின் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட வைக்கிறார். ஆக இரட்டை வேடம் போடுகின்ற கட்சி தி.மு.க.
எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கையுடைய கட்சி என்று ஸ்டாலின் சொல்கிறார். அப்போது தனித்தனி கட்சி எதற்கு, எல்லாவற்றையும் தி.மு.க-வில் சேர்த்துவிடலாம்.
அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தேர்தல் வருகின்றபோது கூட்டணி வைப்போம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. தி.மு.க அப்படி அல்ல. அதிகாரத்திற்கு வருவதற்காக கொள்கையையும் விட்டுத் தரக்கூடிய ஒரே கட்சி தி.மு.க கட்சி.
ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்காக கூட்டணி அமைக்கிறோம். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும்.
1999-ம் ஆண்டு பா.ஜ.க உடன் தி.மு.க கூட்டணி அமைத்தது. முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். 1 ஆண்டு சுயநினைவு இல்லாமல், இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அப்படியே 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார்கள். தி.மு.க-வுக்கு கொள்கையும் கிடையாது, கூட்டணியும் கிடையாது. அடிக்கடி நிறம் மாறும் கட்சி தி.மு.க.
234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும். அ.தி.மு.க யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பியே உள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழ்நாட்டிலே என்றுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில், எந்த மாற்றமும் கிடையாது தேசியக் கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க நிர்பந்தப்படுத்துவது சரியல்ல; தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.