Advertisment

தி.மு.க கூட்டணி கட்சிக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை: இ.பி.எஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடப்பட்டதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக தலைமை அலுவலகம் தாக்குதல் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Edappadi-k-palaniswami | cpi | dmk: சென்னை தியாகராயர் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது திடீரென நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில், கற்கள் போன்ற  பொருட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது பாட்டில்களை வீசிய சம்பவத்தில் அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில், காவலாளியுடன் தகராறு செய்தபடி, கற்கள், காலி மதுபாட்டில்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்திற்குள் வீசியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க-வின் பிரதான கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக  எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். 

இந்த விடியா தி.மு.க ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் தி.மு.க-வின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.  

நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது. தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Edappadi K Palaniswami Cpi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment