Edappadi K Palaniswami | Dmk | டெல்லியில் போதைப் பொருள் கும்பல் ஒன்று கடந்த மாதம் கைதானது. இந்தக் கடத்தில் தி.மு.க முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அவர் தலைமறைவாகினர். தொடர்ந்து, திமுக அயலக அணி பொறுப்பில் இருந்து ஜாபர் சாதிக் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்கை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 10) ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “போதைப் பொருள் மூலம் கிடைத்த பணத்தில் தி.மு.க. மக்களவை தேர்லை சந்திப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்தப் போதைப் போதைப் பொருள் கடத்தலின் போது கிடைத்த பணம் உதயநிதியின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் கொடுத்துள்ளார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை; இதே நிலை நீடித்தால் அடுத்த 7 ஆண்டுகளில் தமிழ்நாடு போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிடும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“