Advertisment

விஜயவாடா அம்மன் ஆலயத்தில் எடப்பாடி சாமி தரிசனம்: அங்கு என்ன சிறப்பு?

இங்கு நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அரக்கர் வதம் நடந்ததால், இங்கு வந்து அம்மனை தரிசித்து சென்றால் எதிரிகள் பிரச்னை நீங்கி பலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

author-image
WebDesk
New Update
Eedapadi Palanisamy

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா ஆலயத்தில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
இந்தக் கோவில் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ளது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்து, அம்மன் கனகம் (தங்கம்) மழை பொழிய செய்த இடம் என்று இக்கோவிலின் புராண வரலாறு கூறுகிறது.

Advertisment

கோவிலில் உள்ள அம்மனுக்கு 8 கைகள் உள்ளன. இந்தக் 8 கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. மேலும் இங்குள்ள தெய்வம் சுயம்புவாக தோன்றியவர் ஆவார்.
இங்கு நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அரக்கர் வதம் நடந்ததால், இங்கு வந்து அம்மனை தரிசித்து சென்றால் எதிரிகள் பிரச்னை நீங்கி பலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Edappadi Palanisamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment