ஆம்... எங்களுக்கு ரத்தக் கொதிப்புதான்: சபாநாயகர் கமெண்டுக்கு இ.பி.எஸ் ஆவேச பதில்

தமிழக சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க எம்எல்ஏ.க்கள் இன்று புதன்கிழமை கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்த நிலையில், அனைவருக்கும் ரத்தக் கொதிப்பா என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாக கேட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆம், எங்களுக்கு ரத்தக் கொதிப்புதான்” பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க எம்எல்ஏ.க்கள் இன்று புதன்கிழமை கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்த நிலையில், அனைவருக்கும் ரத்தக் கொதிப்பா என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாக கேட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆம், எங்களுக்கு ரத்தக் கொதிப்புதான்” பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
EPS Appavu

சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்ததை சுட்டிக்காட்டி, “உறுப்பினர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் வந்துவிட்டதா?” என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர்கள் மற்றும் பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தைத் தொடர்ந்து இந்த நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் வகையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி, சட்டப்பேரவைக்கு வருகை தந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கைகளில் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், நாமக்கல் கிட்னி திருட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அ.தி.மு.கவினர் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்ததை சுட்டிக்காட்டி, “உறுப்பினர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் வந்துவிட்டதா?” என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

Advertisment
Advertisements

அப்போது, அமைச்சர் ரகுபதி, “அது பற்றி நான் விளக்கம் சொல்கிறேன். சிறைவாசிகளுக்கு எல்லாம் ஓர் அடையாளம் தருவார்கள் அல்லவா?. அதுபோல் அ.தி.மு.க உறுப்பினர்கள் ஓர் அடையாளத்தோடு வந்துள்ளனர். மற்றபடி, நான் அவர்களை தவறாகச் சொல்லவில்லை.” என்றார்.

இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு கிண்டல் தொனியில் ‘அனைவருக்கும் பி.பி-யா’ என்று கேட்டதற்கு,  “ஆம், எங்களுக்கு ரத்தக் கொதிப்புதான்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார்.

இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். மு.க. ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்துகொண்டு, இப்போது உங்களுக்கு இந்த சினிமா வசனம் எல்லாம் தேவையா?

"எத்தனைக் காவலர்கள் கரூர் த.வெ.க. கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்?" என்ற கேள்விக்கு கூட, உங்களின் பதிலுக்கும், உங்கள் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அளித்த பதிலுக்கும் முரண்பாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் கூட தெளிவான பதில் அளிக்க முடியாத நீங்கள், கரூர் துயரத்தை எந்த லட்சணத்தில் விசாரித்து இருப்பீர்கள் என்பதை தமிழக மக்கள் இன்று உணர்ந்திருப்பர்.

கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் சொல்லொண்ணா வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் கருப்பு பட்டை அணிந்தால், அதையும் கிண்டல் செய்யும் தொனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும், மிகக் கேவலமாகப் பேசினர்.

"ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ?" என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலோ என்னவோ, கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது.

16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட, அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகரோ, கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார்.

இப்போது சொல்கிறேன்- ஆம். ரத்தக் கொதிப்பு தான்.

ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்.

இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறதே... அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம்.

திரு. ஸ்டாலின் அவர்களே- இன்று நீங்கள் ஒரு முதல்வராக பொறுப்போடு பேசுவீர்கள் என்று எண்ணினேன். ஆனால் நீங்களோ, உங்கள் கருர் சட்டமன்ற உறுப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் Version 2.0 போல பேசியுள்ளீர்கள்.

உண்மை சுடும் என்பதை மட்டும் நினைவிற்கொள்க.” என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Eps

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: