அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆரியம் திராவிடம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளை சாதிய அடையாளத்துடன் பேசுகின்றனர் என்ற கவர்னரின் குற்றச்சாட்டு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, " ஆரியம் திராவிடம் குறித்து எனக்கு தெரியாது; இது தொடர்பான ஐயப்பாடுகளுக்கு அறிஞர்கள் தான் பதில் கூற வேண்டும். அவர்களிடம் தான் இது குறித்த பதிலை நீங்கள் கேட்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் தொடருமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, " 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதை உறுதிபட தெரிவிக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, " மு.க ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார்; இதனால்தான் இது போன்ற வதந்திகளை தொடர்ந்து பரப்புகின்றனர்" எனவும் குற்றம் சாட்டினர்.
சி என் அண்ணாதுரை தொடர்பான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு எதிர்வினை ஆற்றும் வகையாக பாரதிய ஜனதா அதிமுக கூட்டணி பிரிந்தது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவு கூறத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“