Advertisment

திருமா-விடம் போனில் பேசிய இ.பி.எஸ்: கூட்டணியில் மாற்றமா?

பா.ஜ.க உடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துள்ள நிலையில், திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்பு கொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami phones Thirumavalavan hospitalised

மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் இன்று வீடு திரும்புவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

Edappadi-k-palaniswami | thirumavalavan | aiadmk | vck: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான தொல். திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், காய்ச்சல் காரணமாக 3-வது நாளாக மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் வி.சி.க தலைவர் திருமாவளவனிடம், தொலைபேசி மூலம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

பா.ஜ.க உடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துள்ள நிலையில், திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்பு கொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் இன்று வீடு திரும்புவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment