அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் நேரலையில் கட்சியினருடன் கலந்துரையாடினார்.
அப்போது, “எனக்கு சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆர் பிடிக்கும். அவர் கட்சி தொடங்கிய பிறகு சிலுவம்பாளையத்தில் ஒரு தொண்டராக எனது அரசியல் பயணத்தை தொடங்கினேன்.
கல்லூரி செல்லும்போது என் தந்தையிடம் புல்லட் வேண்டும் என்று அடம் பிடித்தேன். அவரும் எனக்கு புல்லட் வாங்கிக் கொடுத்தார்.
அந்த சிறு வயதில் என்னால் புல்லட்-ஐ தாங்கிப் பிடிக்க முடியவில்லை. அதற்கு உதவியாளர் ஒருவரை என் தந்தை நியமித்தார். அவர் எனக்கு 3 மாதங்கள் உதவி புரிந்தார்” என்றார்.
தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி குறித்து கூறுகையில், “நான் சாதாரண தொண்டனாக இருந்து இன்று பொதுச்செயலாளர் ஆகியுள்ளேன். ஒரு தொண்டரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை நான் அறிவேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“