/tamil-ie/media/media_files/uploads/2023/08/Edapadi-K-Palaniswamy.jpg)
எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
மதுரையில் அதிமுக மாநாடு ஆக.20ஆம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த 3 நாட்களாக மதுரையில் குவிந்தனர்.
இந்த மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமது ஆட்சிக் காலத்தில் செய்த மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறினார். மேலும், ஒரு விவசாயி என்கிற அடிப்படையில் அவர்களின் கஷ்டங்களை அறிந்த நான் மத்திய அரசாங்கத்தோடு பேசி தஞ்சை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வழிசெய்தேன்” என்றார்.
#Live வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு | #AIADMK_எழுச்சி மாநாடு https://t.co/NkdUY6JAes
— AIADMK (@AIADMKOfficial) August 20, 2023
தொடர்ந்து, “தமிழகத்தின் 5 மாவட்டங்கள் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி காட்டினார்” என்றார்.
நீட் தேர்வு பற்றி குறிப்பிடுகையில் இந்த விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடி வருகிறது. காங்கிரஸ் தலைமையில் நீட் கொண்டுவரப்பட்டபோது அதற்கு உடந்தையாக இருந்த கட்சி திமுக எனவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதனை எடப்பாடி பழனிசாமி மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.