ஒவ்வொரு நிமிடமும் அச்சுறுத்தல்.. கே.என். நேரு- திருச்சி சிவா மோதல்.. மு.க. ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி
கே.என். நேரு ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டியுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு ஒவ்வொரு நிமிடமும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமைச்சர் கே.என் நேரு இன்று காலை திருச்சி கன்டோன்மென்ட் அருகில் உள்ள ஸ்டேட் பேங்கர்ஸ் காலனியில் இறகு பந்து மைதானத்தை திறக்கச் சென்றார்.
Advertisment
இதே நேரம் அந்த பகுதியிலேயே வசிக்கும் திருச்சி சிவா எம்பியின் பெயரை பூங்கா சிறப்பு கல்வெட்டிலும் போஸ்டரிலும் போடவில்லை என அவரது தரப்பினர் அமைச்சர் கே என் நேருவுக்கு கருப்புக்கொடி காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்
இதனை கண்டித்து அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்பியின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திலையும் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அப்போது பெண் போலீஸ் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக் காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் ஒவ்வொரு நிமிடமும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இன்று நடந்த இந்த மோதலுக்கு மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/