கல்வி தொடர்பாக மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றியதை எதிர்த்து தி.மு.க எம்.எல்.ஏ எழிலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படியுங்கள்: கோவை டாக்டர் கொலை வழக்கு; வழக்கறிஞர் ராஜேந்திரனை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கடந்த 1975 - 1977ல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கின்றன, மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் எம்.எல்.ஏ எழிலன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்தப் பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது. குழந்தைக்கு தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil