பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நொடிக்கு நொடி அப்டேட் செய்த அமைச்சர் செங்கோட்டையன்!

செங்கோட்டையன் ட்விட்டர் பக்கத்தில்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் மாணவர்களின்  தேர்ச்சி புள்ளிகள், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதங்கள் என அனைத்து தகவல்களையும் அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நொடிக்கு நொடி அப்டேட் செய்து வருகிறார்.

தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில்  கடந்த மார்ச் 1 ஆம் தேதி பிளஸ் தேர்வு நடைப்பெற்றது.  இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது.

மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி அனைத்தும்  நிறைவடைந்து  இன்று(16.5.18)   தேர்வு முடிவுகள் வெளியாகின.  இந்நிலையில், தேர்வுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

முடிவுகள் வெளிவந்த பின்பு,  நொடிக்கு நொடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேர்வு முடிவுகள் குறித்த அனைத்து அப்டேட்டுக்களை செய்து வருகிறார். இவரின் இந்த அப்டேட் மூலம் மாணவர்களால் எளிதில்  தேர்ச்சி விகிதம் குறித்த அனைத்து விவரங்களையும் எந்தவித சந்தேகவும் இன்றி அறிந்துக் கொள்ள உதவுகிறது.

முன்பெல்லாம், பொதுத்தேர்வு முடிவுகள் வெளிஒவந்த பின்பு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களை தேர்வு முடிவுகள் குறித்து முழு தகவலையும் வாசிப்பார். ஆனால் அரசியல் தலைவர்கள் பலரும் ட்விட்டர் தலைவர்களாக மாறிவிட்ட காரணத்தால் எல்லா தகவல்களையும்  ஒரு ட்வீட்டில்  முடித்து விடுகின்றன. அதே சமயத்தில் இந்த தகவல்களை எல்லாம் அமைச்சர் செங்கோட்டையன் தான் பதிவிடுகிறாரா அல்லது அவரின் அட்மினா என்பது யாருக்குன் தெரியாது.

அஜித் பிறந்த நாளின் போது வாழ்த்துக்கள் தெரிவித்து  செங்கோட்டையன் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவிற்கு அவர், தனது அட்மின் தான் காரணம் என்று தெரிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close