2018 ஆம் ஆண்டு 10 வகுப்பு முடித்தவர்களா நீங்கள்?? இதோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2018 ஆம் ஆண்டு வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவிப்பணம் ஆண்டு வருமானம் இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், இந்த ஆண்டு (2018) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேல் (உடல் ஊனமுற்றோருக்கு 75 % மதிப்பெண்களுக்கு மேல் ) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் June 30,2018க்கு முன் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் அல்லது 7339659929 என்ற கைப்பேசி எண்ணில் திரு.ஜேக்கப் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.சரோஜினி தாமோதரன் நிறுவனத்தின் காப்பாளர் திருமதி.குமாரி ஷிபுலால், இதுபற்றி கூறி இருப்பது, “ஒவ்வொரு தேர்ச்சியடையும் ஆண்டின்போதும், எங்களின் உழைப்பை, ஒவ்வொரு சமுதாய அடிநிலை வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி பயிலும் உரிமைக்காகக் கொடுத்து வருகிறோம். கல்வி என்பது வாழ்வின் கடவுச்சீட்டு என்று நான் நம்புகிறேன்” என்கிறார்.

சரோஜினி தாமோதரன் நிறுவனம்:

சரோஜினி தாமோதரன் நிறுவனம் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாக, திருமதி.குமாரி ஷிபுலால் மற்றும் S.D.ஷிபுலால் ஆகியோரின் வலிமையான செயல்பாட்டின் மூலம் 1999ல் தொடங்கப்பட்டு சிறியளவில் கேரளாவின் ஆலப்புழவில், உதவிப்பணம் கொடுக்க ஆரம்பித்து தற்போது கல்வி, ஓய்வூதியத் திட்டம், ஊட்டச்சத்து, இயற்கை விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம் போன்ற பலத் துறைகளில் உதவி அளித்து வருகிறது மேலும் இயற்கை விவசாயத்திற்காக அக்ஷய ஸ்ரீ விருதும் வழங்குகிறது. முதியோர்களுக்காக வித்யா ரக்க்ஷன் என்னும் புதிய திட்டமும் இணைக்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close