தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனீஷ் சேகர் தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவர் தனது ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஏற்றுக்கொண்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அனீஷ் சேகர் மருத்துவம் படித்த இவர், குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, 2011-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம மிகவும் நேர்மையான அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
இவர் கடைசியாக, தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் சொந்த காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்வதாக அனீஷ் சேகர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“