தீவிர பிரச்சாரத்திற்கு தயாராகும் தலைவர்கள்! அக்னி அரசியலை நோக்கி தமிழகம்!

Election 2019: திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு

Election 2019: DMK, ADMK Candidates: எதிர்வரும் தமிழக தேர்தல் களத்தில், அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும், முடிந்தளவு பலமான கூட்டணி அமைத்து, தொகுதிகளை ஒதுக்கி, மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கும் சேர்த்து தங்கள் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. தேர்தல் அறிக்கைகளையும் இரு கட்சிகளும் இறுதி செய்துவிட்டன. அதேசமயம்,  தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன.

திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் விவரம் மற்றும் தமிழகத்தின் இன்றைய ஒவ்வொரு அரசியல் நகர்வுகள் குறித்தும் அறிய ஐஇதமிழ் வழங்கும் பிரத்யேக லைவ் அப்டேட்ஸுடன் இணைந்திருங்கள்.

Election 2019 Tamilnadu Updates

03:35 PM – ‘நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல். ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது’ என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:05 PM – அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். இன்று மாலை மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

02:35 PM – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

02:00 PM – அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சாவூரில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

01:55 PM – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

01:45 PM – சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

01:10 PM – மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

மதுரையில் ஏப்ரல் 18ம் தேதி, காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு இரவு 8 மணி வரை நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

01:00 PM – விஜயகாந்த் அறிக்கை

12:40 PM – தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கள்ளக்குறிச்சி – எல்.கே.சுதீஷ்

திருச்சி – இளங்கோவன்

விருதுநகர் – அழகர்சாமி

வடசென்னை – அழகாபுரம் மோகன்ராஜ்

12:15 PM – பாமக முழு வேட்பாளர் பட்டியல்

பாமகவின் ஐந்த மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள இரு தொகுதிக்கான வேட்பாளர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் – மருத்துவர் வைத்திலிங்கம்

திண்டுக்கல் – ஜோதிமுத்து

11:45 AM – மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சி.கே.குமரவேல் விலகியுள்ளார். கோவை சரளா உள்ளிட்ட சில நிர்வாகிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் விலகல் கடிதம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

11:30 AM – வைகோவிடம் வாழ்த்துப் பெற்ற கனிமொழி

திமுக சார்பில் தூத்துக்குடியில் களம் காணும் கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

11:20 AM – வேட்பாளர் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட தடைகோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை நாளை அவசரமாக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

10:55 AM – வழக்கை சுட்டிக் காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தல் அறிவிக்காதது தவறு. தேர்தல் ஆணையம் தன விருப்பம் போல் செயல்பட்டிருக்கிறது என அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுகவின் சரவணன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், வரும் வெள்ளியன்று, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

10:40 AMதேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

10:30 AM – திருவாரூரில் பிரச்சாரத்தை துவக்கும் ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 20ம் தேதி, திருவாரூரில் தனது முதல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

10:15 AM – மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்

மக்கள் நீதி மய்யத்தின் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் (மார்ச்.20) வெளியிடப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:00 AM – ஜாக்பாட் குடும்பம்!

ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் அண்ணன் மகாராசன் திமுக வேட்பாளர், தம்பி லோகிராசன் அதிமுக வேட்பாளர்.

09:35 AM – வாரிசு வேட்பாளர்கள் விவரம்

அதிமுக வாரிசு வேட்பாளர்கள்:

தேனி – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத்

தென் சென்னை – அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்

திமுக வாரிசு வேட்பாளர்கள்:

தூத்துக்குடி – மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகள் கனிமொழி

வேலூர் – திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

வட சென்னை – முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி

மத்திய சென்னை – மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின் மகன் தயாநிதி மாறன்

கள்ளக்குறிச்சி – முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி

தென் சென்னை – முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன்

09:15 AM – பாமக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல், முழு விவரம்

08:50 AM – அதிமுக சார்பில் 20 தொகுதிகளில் களம் இறங்கும் வேட்பாளர்கள் யார் ?

8:35 AM – திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! அனல் பறக்கும் போட்டி ரெடி! – முழுவதும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Election News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close