Advertisment

தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது: கட்சித் தலைவர்கள், வெளி நபர்கள் வெளியேற உத்தரவு

தமிழகம், புதுவையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்டப் பிரசாரம் செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
district wise rural local body election results

district wise rural local body election results

தமிழகம், புதுவை உள்ளிட்ட 2-வது கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 16) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இறுதி நாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கிய பிரசாரத்தை இன்று திருவாரூரில் நிறைவு செய்தார்.

Advertisment

தமிழகம், புதுவை உள்பட 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்ற 15 மாநிலங்களில் 97 தொகுதிகளில்  3 வாரங்களுக்கும் நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை நிறைவு பெற்றது. இறுதி நாள் பிரசாரத்தை தலைவர்களும், வேட்பாளர்களும் பரபரப்பாக மேற்கொண்டனர். அதோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

 

Live Blog

Election 2019 Live Updates: Last Day Of Edappadi Palaniswami and MK.Stalin Campaign

Election 2019 Live Updates: இறுதிக்கட்ட பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின்














Highlights

    18:33 (IST)16 Apr 2019

    தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது

    தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டது. கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    15:36 (IST)16 Apr 2019

    கொடநாடு விவகாரம்

    கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் ஸ்டாலினும் பேசக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    14:12 (IST)16 Apr 2019

    மோசமான நிலையில் ஜனநாயகம்

    டெல்லியில் 100 நாட்களுக்கு மேல் போராடிய விவசாயிகளை பா.ஜ.க - அ.தி.மு.க அரசுகள் சட்டை செய்யவில்லை. தற்போது ஜனநாயகம் மோசமான நிலையில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு உள்ளது - அண்ணா அறிவாலயத்தில் சந்திரபாபு நாயுடு பேட்டி

    13:55 (IST)16 Apr 2019

    தமிழக மக்களுக்கு வேண்டுகோள் - சந்திரபாபு நாயுடு

    தமிழ் - தெலுங்கு மக்கள் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம். திமுக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவே தற்போது நான் சென்னை வந்துள்ளேன். மு.க.ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் விரும்புவது தெரிகிறது.

    13:50 (IST)16 Apr 2019

    சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். “இப்போது இருப்பது அண்ணா திமுக இல்லை. மோடி திமுக, ஆகையால் அதிமுக-வுக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது மோடிக்கு போட்டதற்கு சமம். மக்களுக்கு கஷ்டம் வந்த போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மக்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதை மோடி கற்றுக் கொள்ள வேண்டும். கலைஞர் ஒரு மாபெரும் தலைவர், அவரது மகனாகிய மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்குங்கள்” - சந்திரபாபு நாயுடு 

    13:23 (IST)16 Apr 2019

    தமிழகத்தில் இதுவரை 1022 கிலோ தங்கம், ரொக்கம் ரூ 135 கோடி பறிமுதல்

    சேப்பாக்கம் எம்.எல்.ஏக்கள் விடுதியில் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு கூறினார். ‘வேலூரில் பணம் பறிமுதல் குறித்து அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வேலூர் தேர்தல் தொடர்பாக ஆணையத்திடம் இருந்து தற்போது வரை தகவல் வரவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.

    தமிழகத்தில் இதுவரை ரூ135.41 கோடி பணம், 1022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ கூறினார்.

    12:51 (IST)16 Apr 2019

    பா.ஜ.க-வுக்கு பாடம் புகட்டுங்கள்

    தமிழக மக்களை அனைத்து விதத்திலும் வஞ்சித்த பா.ஜ.க அரசுக்கு தக்க பாடம் புகட்டும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு.

    12:12 (IST)16 Apr 2019

    வாய்மைக்கு வாய்ப்பளியுங்கள் - ஸ்டாலின்

    வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்மைக்கு வாய்ப்பளியுங்கள் என தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். 

    11:56 (IST)16 Apr 2019

    அன்புமணியின் மீது அதிக வழக்கு

    தமிழக எம்.பி-க்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 45% சதவீதம் வருகை பதிவுடன் தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் உள்ளார். அதோடு 12 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அதிக பட்சமாக இவர் மீது 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

    11:50 (IST)16 Apr 2019

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

    துரை முருகனின் மகன் என்பதை விட, திமுக வேட்பாளர் என்பதே எனக்கு மிகப்பெரிய பெருமை தருகிறது. 

    11:18 (IST)16 Apr 2019

    தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஏற்பு

    வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கும் ஆணையத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதோடு சாதி, மதத்தை கொண்டு தேர்தலில் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம்

    11:07 (IST)16 Apr 2019

    பாரிவேந்தருக்கு திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து, வி.சி.க தலைவர் திருமாவளவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    11:01 (IST)16 Apr 2019

    சேலத்தில் எடப்பாடி

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் தனது இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 

    10:33 (IST)16 Apr 2019

    குடவாசலில் ஸ்டாலின் பரப்புரை

    திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். 

    10:20 (IST)16 Apr 2019

    நோ பேட்டி

    இன்று மாலை 6 மணி முதல் 18-ம் தேதி மாலை 6 மணி வரை 48 மணி நேரங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், நட்சத்திரப் பேச்சாளர்களும் தேர்தல் சம்பந்தமான எந்தவொரு பேட்டியையும் ஊடகங்களுக்கு அளிக்கக் கூடாதென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    10:01 (IST)16 Apr 2019

    புதுச்சேரியில் 144

    தேர்தலில் பண புழக்கத்தை தவிர்க்க, 60 மணி நேரத்திற்கு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. 

    09:48 (IST)16 Apr 2019

    திருவாரூரில் ஸ்டாலின் பரப்புரை

    திருவாரூரை அடுத்த வலங்கைமானில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். 

    09:46 (IST)16 Apr 2019

    சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அறிவாலயத்தில் அவர் இன்று சந்திக்கிறார்.

    தமிழகம், புதுவையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்டப் பிரசாரம் செய்தனர்.
    M K Stalin General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment