Advertisment

நாடாளுமன்ற தேர்தல்: அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக கோவையில் ரெடியாகும் வாகனங்கள்

கோவையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சார வாகனம்  தயார் செய்யப்பட்டு வருகிறது.நாடாளுமன்றத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

Advertisment

 இவ்வாறு தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக கோவையில் பிரசார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற பிரசார வாகனங்கள் தயார் செய்யப்பட்ட போதிலும் - கோவையில் தயார் செய்யப்படும் பிரசார வாகனங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்  நாட்டிலேயே சிறந்ததாகவும் விளங்குகிறது.

 

 

இதனால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடாகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கும் இங்கு பிரசார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.மேலும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் முதல் -அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோர்களின் தேர்தல் பிரசார வாகனங்கள் கோவையில் தான் தயார் செய்யப்பட்டன.

 

இங்கு தயார் செய்யப்படும் பிரசார வாகனங்களில் சுழலும் இருக்கைகள், ஓய்வு எடுக்கும் வசதிகள், படுக்கை மற்றும் கழிப்பறை வசதிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.குறிப்பாக தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய ஹைட்ராலிக் இருக்கைகள் பொருத்தப்படுகின்றன. இதன்மூலம் தலைவர்கள் இருக்கை ஹைட்ராலிக் லிப்டிங் முறையில் வாகனத்தின் நடுவே தூக்கப்பட்டு பொதுமக்கள், தொண்டர்களை பார்த்தப்படி பேசலாம். மேலும் வேனில் பயணிக்கும் போது தலைவர்களின் முகங்கள் தொண்டர்களுக்கு தெளிவாக தெரிய வசதியாக அவர்கள் அமரும் இருக்கைக்கு முன் பிரத்யேக விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

 

 

முக்கிய தலைவர்கள் வேனில் செல்லும் போது அவர்களுடன் பாதுகாவலர்கள் செல்வது வழக்கம். எனவே பிரசார வாகனத்தை சுற்றிலும் கைப்பிடிகளுடன் கூடிய படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. இதில் 10 பாதுகாப்பு அதிகாரிகள் வரை நின்று கொண்டு தங்களது பணியினை செய்ய முடியும். மேலும் தலைவர்கள் பேசுவதை தொண்டர்கள் கேட்க வசதியாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சவுண்ட் சிஸ்டங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

 

 

சில வாகனங்கள் தலைவர்கள், தங்களது கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வகையில் சோபாக்களும் அமைக்கப்படுகின்றன. முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் தலைவர் தனது இருக்கையில் அமர்ந்தபடி வாகனத்தின் உள்ளே செல்லும் வசதியும் செய்து கொடுக்கிறோம். நீண்ட தூரம் பயணம் செய்தாலும் உடல்சோர்வு ஏற்படாத வகையில் இந்த பிரசார வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன  பிரசார வாகனங்கள் தயார் செய்யும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment