Advertisment

அரசே மது விற்பதா? தனியாரிடம் ஒப்படையுங்கள்: கமல்ஹாசன்

Kamal Haasan Said about TN Wine Shop : சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என கூறியுள்ள மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மதுக்கடைகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
அரசே மது விற்பதா? தனியாரிடம் ஒப்படையுங்கள்: கமல்ஹாசன்

Kamal Haasan Said about TN Wine Shop : தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வரும் நோக்கத்தை கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன், தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக-வின் குறைகளை சுட்டிக்காட்டி வரும கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், தற்போது அதிமுக அரசை கடுமையாக சாடியுள்ள கமல்ஹாசன், சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று முன்தினம், காவல்துறை அதிகாரி ஒருவர் குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவரால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், பட்டபகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு போதை ஆசாமியால்,கடமை தவறாத காவல்துறை  ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் லட்சக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் வயதானவர்கள் என அனைவரும் குடிக்கு அடிமையாகி பல குற்ற செயல்கள் நடக்க காரணமா உள்ளனர். பகலிலேயே குடித்துவிட்டு குடி நோயாளியாக மாறி வருகின்றனர்.

இதனால் அவர்களை திருத்தி நல்வழிபடுத்த மதுக்கடைகள் இருக்கும் இடமெல்லாம் மது அருந்துவோர் மறுவாழ்வு இல்லம் அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கமல்ஹாசன், சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல, இதனை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு அரசு கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு அதிக வருமானம் தருவது டாஸ்மாக் கடைகள். சாதாரண நாட்காளாக இருந்தாலும், ஏதேனும்,விழா மற்றும் பண்டிகை காலமாக இருந்தாலும், இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிவருவது வழக்கம். அந்த டாஸ்மாக் கடைகளின் மூலம் நாள் வருமானம் மட்டுமே கோடிகளை தொடுவது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Kamal Haasan Makkal Neethi Maiyam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment