தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக அரசியலில் இப்போதே அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பற்றியும் முதல்வர் வேட்பாளர் பற்றியும் பேச்சுகள் விவாதமாகியுள்ளது. இந்த நிலையில், ஜனவரி மாதம் 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழத்தில் வருகிற நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கப் பணி டிசம்பர் 15-ம் தேதி முடிவடைந்த பின்னர், 2021-ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்க வயதை நிரூபிகப்பதற்கு பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்தல், நீக்கம் செய்யலாம். VOTER HELP LINE என்ற செல்போன் ஆப் மூலமாகவும் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"