மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சி விவகாரத்தில், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படை யில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா கட்சி என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது அ.தி.மு.க விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அ.தி.மு.க-வில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள அ.தி.மு.க-வின் எடப்பாடி கே.பழனிசாமி அணி, அ.தி.மு.க-வையும் இரட்டை இலை சின்னத்தையும் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் இருப்பதால் ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா கட்சி என்று அங்கீகரித்து பால்தாக்கரே நிறுவிய சிவசேனா கட்சியின் தலைமைப் பதவி மற்றும் அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் அளித்துள்ளது.
2017-ம் ஆண்டு அ.தி.மு.க பிரச்னை, சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ் (எம்) கட்சி விவகாரங்களில் அதன் உத்தரவுகளை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றதாகக் கூறியது. சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை சோதனையின் முடிவு, ஷிண்டேவுக்கு ஆதரவான பெரும்பான்மை சோதனையில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அ.தி.மு.க கட்சி அமைப்பும் அதன் சட்டமன்றக் கட்சியும் தன்னுடன் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறிய வாதத்தின்படியே, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க-வின் 65 எம்.எல்.ஏ.க்களில் 61 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். அ.தி.மு.க-வின் 5 எம்.பி.க்களில் 3 எம்.பி.க்களும் 75 மாவட்டச் செயலாளர்களில் 71 மாவட்டச் செயலாளர்களும் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்படி பழனிசாமி பக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் முன் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர்” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சி விவகாரத்தில், எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படை யில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா கட்சி என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருத்து அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தை அளித்திருப்பதால், அ.தி.மு.க விவகாரத்திலும் இதே உத்தரவு வரும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“