விக்கரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஜீலை 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் 14ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் கடந்த 21ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்ந்த 16 வேட்பு மனுக்கள் மற்றும் சுயேட்சையாக 40 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று வேட்புமனுக்கான பரிசீலனை விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. மனுக்காள் வாபெஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால் இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.