Advertisment

தமிழகத்தில் ஒரே நாளில் 6618 பேருக்கு கொரோனா; 22 பேர் மரணம்

Tamilnadu updates: மாதவராவ் வெற்றிப் பெற்றிருந்தால், தொகுதியில் மறுத்தேர்தல் நடக்கும் எனவும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
corona cases in tamilnadu

tamil nadu daily coronavirus report

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இடைத்தேர்தல் ?

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்தே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இன்று காலமானார். இதனையடுத்து, தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும், ஒருவேளை மாதவராவ் வெற்றிப் பெற்றிருந்தால், தொகுதியில் மறுத் தேர்தல் நடக்கும் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்றைய தினசரி பாதிப்பாக 5989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1977 கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்றின் மையமாக மாறிய இந்தியா!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாடு முழுவது நேற்று ஒரு நாளில் மட்டும் 1,52,879 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தொற்றின் பரவல் வேகமெடுத்துள்ளது.

கருர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்ட விசிக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:35 (IST) 11 Apr 2021
    டிக்கா உட்சவ் திருவிழா: இந்தியாவில் ஒரேநாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

    டிக்கா உட்சவ் திருவிழா மூலம் இந்தியாவில் ஒரேநாளில் 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 22:12 (IST) 11 Apr 2021
    சன் ரைசர்ஸ் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த கே.கே.ஆர்

    ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கே.கே.ஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்க்குடன் களம் இறங்கியுள்ள ஹைதராபாத் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன் எடுத்துள்ளனர்.


  • 20:39 (IST) 11 Apr 2021
    தேர்தலிலின்போது கொடுத்த டோக்கனுக்கு தற்போது பணப்பட்டுவாடா; அதிமுகவினர் 2 பேர் வழக்குப்பதிவு

    அம்பத்தூர் 89வது வார்டில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் செய்ததையடுத்து, தேர்தலின் போது கொடுத்த டோக்கனுக்கு தற்போது ரூ.500 வழங்கியதாக அதிமுகவினர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 18:52 (IST) 11 Apr 2021
    ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

    கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வரும் நாட்களில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


  • 18:37 (IST) 11 Apr 2021
    தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6000-ஐ தாண்டியது; 22 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 22 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  • 18:33 (IST) 11 Apr 2021
    தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6000-ஐ தாண்டியது; 22 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 22 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  • 17:24 (IST) 11 Apr 2021
    எடப்பாடி பழனிசாமிதான் டாப்; மற்றவர்கள் எல்லாம் டூப் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுகவின் ஹீரோவான எடப்பாடி பழனிசாமிதான் டாப்; மற்றவர்கள் எல்லாம் டூப்; எடப்பாடி பழனிசாமி நல்லவர், வல்லவர், ராசியானவர்” என்று தெரிவித்துள்ளார்.


  • 17:16 (IST) 11 Apr 2021
    மியான்மர் ராணுவத்தால் மேலும் 80 பேர் சுட்டுக்கொலை!

    மியான்மரில் ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 80 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டி இருப்பதாக தகவல்.


  • 16:43 (IST) 11 Apr 2021
    கொரோனா அச்சம்: ஒசூரில் இ பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி

    தமிழக எல்லையான் ஒசூரில் இ பாஸ் பெற்ரு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்புக்குப் பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.


  • 16:11 (IST) 11 Apr 2021
    ஸ்ரீவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன் என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 15:52 (IST) 11 Apr 2021
    திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

    கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த கோரிக்கை வைத்துள்ளார்.


  • 15:19 (IST) 11 Apr 2021
    அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்- டெல்லி முதல்வர்

    கொரோனா தடுப்பூசி தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வயது கட்டுபாடுகளை தளர்த்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.


  • 14:57 (IST) 11 Apr 2021
    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 14:39 (IST) 11 Apr 2021
    ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் நடந்தால், மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும்-கே.எஸ்.அழகிரி

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று காலமானர். இருப்பினும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஒருவேளை மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடக்கும்.இந்நிலையில் இடைத்தேர்தல் நடந்தால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிடுவார் என காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


  • 14:29 (IST) 11 Apr 2021
    கர்ணன் வெற்றிக்கு மாரி செல்வராஜ் நன்றி

    பரியேறும் பெருமாள் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் வெள்ளிகிழமை முதல் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இத்திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். கர்ணன் திரைப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது.


  • 14:10 (IST) 11 Apr 2021
    மாதவ ராவ் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

    இன்று மறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவை கேட்டு மன வேதனை அடைந்ததாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


  • 13:42 (IST) 11 Apr 2021
    மேற்கு வங்க துப்பாக்கி சூடு இனப்படுகொலை - மம்தா ஆவேசம்

    மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வாக்காளர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு ஒரு இனப்படுகொலை என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.


  • 13:27 (IST) 11 Apr 2021
    மதுரை எய்ம்ஸ் - ஜப்பான் நிதி நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம்

    மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உதவி தொடர்பாக ஜப்பான் நிதி நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது


  • 13:23 (IST) 11 Apr 2021
    வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்; திமுக பிரமுகர்கள் கைது

    வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரிடம் திமுக வை சேர்ந்த இரு பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 12:56 (IST) 11 Apr 2021
    5 நாடுகளில் இந்திய கொரோனா!

    இந்தியாவில் இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஐந்து நாடுகளுக்கு பரவுயுள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இரட்டை உருமாற்றம் பெற்ற இந்திய வகை கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


  • 12:52 (IST) 11 Apr 2021
    அதிமுக எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கம்!

    பன்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


  • 12:49 (IST) 11 Apr 2021
    அரக்கோணம் இரட்டை கொலை; பாடலாசிரியர் தெருக் குரல் அறிவு கோரிக்கை!

    அரக்கோணம் இரட்டைப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, பாடலாசிரியர் தெருக் குரல் அறிவு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அவரின் ட்விட்டர் பதிவில், சாதிய வெறி நோயாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.


  • 12:37 (IST) 11 Apr 2021
    தண்ணீருக்கு பதில் ஆசிட்; ஆவடி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

    ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் மாத்திரை சாப்பிடுவதற்காக தண்ணீருக்கு பதிலாக ஆசிட் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ள்து.


  • 12:34 (IST) 11 Apr 2021
    தடுப்பூசி திருவிழா; பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்

    இன்று முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். பிறரையும் அணிய ஊக்குவிக்க வேண்டும். தடுப்பூசி கிடைக்க வசதி இல்லாதவர்களுக்கு மருத்து கிடைக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கு மருந்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை நாட்டு மக்களிடையே முன்வைத்துள்ளார்.


  • 12:33 (IST) 11 Apr 2021
    தடுப்பூசி திருவிழா; பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்

    இன்று முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். பிறரையும் அணிய ஊக்குவிக்க வேண்டும். தடுப்பூசி கிடைக்க வசதி இல்லாதவர்களுக்கு மருத்து கிடைக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கு மருந்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை நாட்டு மக்களிடையே முன்வைத்துள்ளார்.


  • 12:25 (IST) 11 Apr 2021
    மாதவராவ் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்!

    ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைந்த செய்தி, மன வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது இழப்பை தாங்கும் சக்தியை குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் அளிக்கும் படி இறைவனிடம் கேட்டுக் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 12:21 (IST) 11 Apr 2021
    ‘எம்.எல்.ஏ,வாக மாற வேண்டியவர்’ - மாதவராவ் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!

    ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியின் சார்பாக எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டியர் மாதவராவ். ஆனால், அவரது திடீர் மறைவு ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகி உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 12:15 (IST) 11 Apr 2021
    மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி!

    கர்ணன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த பிறகு, அருமையான படத்தை வழங்கியுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நடிகர் விஜய் சேதுபதி, ஆரத் தழுவி கையில் முத்தமிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.


  • 12:11 (IST) 11 Apr 2021
    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? - முதல்வர் நாளை ஆலோசனை!

    கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சமடைந்திருக்கும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு நடத்தப்படுமா என நாளை முதல்வர் மேற்கொள்ள உள்ள கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


  • 12:05 (IST) 11 Apr 2021
    சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம்!

    ஐபிஎல் போட்டிகள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. அப்போது, டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மெதுவாக பந்து வீசியதற்காக 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  • 11:48 (IST) 11 Apr 2021
    ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும், ஒருவேளை மாதவராவ் வெற்றிப் பெற்றால், தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.


  • 11:43 (IST) 11 Apr 2021
    பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா!

    கரூர் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் அண்ணாமலை ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


  • 11:41 (IST) 11 Apr 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்றுக்கு உள்ளாகிய 839 பேர் உயிரிழந்துள்ளனர்.


Coronavirus Tamilnadu News Update Tamilnadu Latest News Tn Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment