Election flying squad raid: சென்னையில் விடுதியில் தங்கும் எம்.எல்.ஏ-க்கள் அறைகளில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது.
இங்கு நேற்று இரவு 10.30 மணியளவில், வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விடுதியின் சி பிளாக் 10-வது மாடியிலுள்ள, அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர்களின் அறைகளில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில், வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலையடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை நள்ளிரவு 12.30 மணிவரை தொடர்ந்தது, இருப்பினும் இதில் பணமோ பொருளோ கைப்பற்றப்படவில்லை.