Tamil News Live: இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது.
பணப்புழக்கம் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.
Tamil News Live: Latest Tamil News Today!
இதன் இறுதி கட்டமாக மே 19-ம் தேதி, சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து நாளை (மே 23) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
Tamil News Live: Latest Tamil News Today!
தமிழகத்தில் இன்றைய முக்கிய செய்திகள்!
Tamil News Live: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாவதை ஒட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Highlights