தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், தேர்தல் வேலைகளை தொடங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் நந்திமரத் தெருவில் பா.ஜ.க. பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது. ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே அவர் பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என நயினார் நாகேந்திரனிடம் திடீரென தெரிவித்தார். இதனால், அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/14/nainar-2025-07-14-11-26-01.jpg)
வெளிப்படையாக பேசிய பா.ஜ.க. தொண்டரால் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அப்போது குறுக்கிட்ட பாஜக நிர்வாகிகள், அதை பிறகு பேசிக் கொள்ளலாம் எனக்கூறி சமாளித்து அவரை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் நயினார் அதிர்ச்சியடைந்தாலும், அங்கிருந்த மற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.