Advertisment

39 தொகுதியிலும் தி.மு.க அணி ஜெயிக்குமா? 2-வது பெரிய கட்சி எது? தந்தி டி.வி சர்வே ரிசல்ட்

39 தொகுதியிலும் தி.மு.க அணி ஜெயிக்குமா? 2-வது பெரிய கட்சி எது? தந்தி டி.வி சர்வே ரிசல்ட்

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வருகின்ற நாடாளூமன்ற தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக தந்தி டிவி சர்வே செய்துள்ளது.

Advertisment

இந்த கருத்துக்கணிப்பு  முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். அயோத்தி ராமர் கோவில் சிறப்பு தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு  கைகொடுக்குமா ? என்ற கேள்விக்கு 35% மக்கள் ஆம் என்றும், 59% இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 6% கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டால், நீங்கள் பா.ஜ.க விற்கு ஓட்டு போடுவோம் என்று 17% தெரிவித்துள்ளனர். 71 % இல்லை எனவும், 12 %  கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

2024 யார் பிரதமராக விரும்புகிறீர்கள் ? என்ற கேள்விக்கு 65 %  பேரும் ராகுல்காந்தி, 33 % பிரதர் மோடி, 2 % மற்றவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு 42 % மக்கள் ஆம் என்றும், 56 % இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். 2% கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

உங்கள் தொகுதியில் வெற்றிபெறப்போவது யார் என்ற கேள்விக்கு, 43 % தி.மு.க கூட்டணி, 33 % பேர் அ.தி.மு.க கூட்டணி  என்றும், 12 % பா.ஜ.க கூட்டணி என்றும், 8%  பேர் நாம் தமிழர் கட்சி எனவும், 4 % பேர் மற்றவை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

யாருக்கு வாக்களிப்பீர்கள் ? என்ற கேள்விக்கு 42 % பேர் தி.மு.க கூட்டணிக்கு, 30 % பேர் அ.தி.மு.க கூட்டணிக்கும், 13  %  பேர் பா.ஜ.க கூட்டணிக்கும், 8 % பேர் நாம் தமிழர் கட்சிக்கும், 7 % பேர் மற்றவர்களுக்கும்  வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment