Advertisment

அ.தி.மு.க-வில் மீண்டும் ஓ.பி.எஸ் இணைப்பா? மதுரையில் இ.பி.எஸ் பேட்டி

கூட்டணி தர்மத்தை கடைபிடித்து மத்திய அரசை பற்றி விமர்சிக்காமல் இருந்தோம். இப்போது கூட்டணியை விட்டு வெளியேறிய பின் அவர்கள் தவறு செய்தால் உடனடியாக கண்டிப்போம்.

author-image
WebDesk
New Update
EPS

Edappadi Palaniswami

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

Advertisment

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று (மார்ச் 29) காலை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ’நாங்கள் பாஜகவில் இருந்து விலகிவந்த பிறகு வேண்டுமென்றே திட்டமிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து எங்கள் மீது அவதூறு பிரச்சாரத்தை செய்கிறார்கள். தோல்வி பயத்தின் காரணமாக தான் அவர் இப்படி பேசுகிறார் என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

கூட்டணி தர்மத்தை கடைபிடித்து மத்திய அரசை பற்றி விமர்சிக்காமல் இருந்தோம். இப்போது கூட்டணியை விட்டு வெளியேறிய பின் அவர்கள் தவறு செய்தால் உடனடியாக கண்டிப்போம்.

அதற்கு முன் பேசினால் அது தவறு. எங்களை நம்பி கூட்டணி சேருபவர்கள் யாராக இருந்தாலும் கடைசிவரை நாங்கள் விசுவாசமாக இருப்போம். அதிலிருந்து பிரிந்து வந்த பிறகு, நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வரக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் கடுமையாக எதிர்ப்போம். முறியடிப்போம்.

மதுரையில் அதிமுக தான் அமோக வெற்றி பெறும். கருத்துக் கணிப்பில் சொல்வது உண்மையல்ல. களத்தில் அப்படியல்ல. எங்கள் கட்சிக்கு மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எங்க்ளது கூட்டணி அமோக வெற்றி பெறும். பாண்டிச்சேரி, விளவங்கோடு இடைத் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இந்த நாடு சுதந்திர நாடு. ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுதான். நானும் ஒன்றுதான். இங்க நிற்கும் வேட்பாளரும் ஒன்றுதான். எல்லாரும் சமம் தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு.

தேர்தலில் ஐந்து ஓ.பன்னீர்செல்வம் நிற்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் தகுதி இல்லாதவர்களா? தகுதி இருக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்கிறார்.

இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒரு தொண்டன். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கியது இரண்டு கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. நான் எடுத்த முடிவு அல்ல.

உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வீர வசனம் பேசுகிறார். திமுக இரட்டை வேடம் போடுகிறது. யார் களமிறங்கினாலும் ஓட்டு போடுவது மக்கள் தான். அந்த வேட்பாளர் தான் வெற்றி பெறுவார்கள். இன்று தொழிலதிபர்கள், பணக்காரர்கள் தான் நின்று ஜெயிக்க வேண்டும் என்று அவசியமில்லை. சாதரண குடிமகன் கூட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள் கொடுக்கிறார்கள். அதை  அதிமுக பின்பற்றுகிறோம். வெற்றிகரமாக செயல்படுத்துகிறோம், என்று எடப்பாடி  பழனிச்சாமி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment