Advertisment

தேர்தல் பத்திர ஊழல்- திருச்சி எஸ்.பி.ஐ வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தற்போது மார்ச் 4 ஆம் தேதி அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று எஸ்.பி.ஐ. வங்கி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுத்துள்ளன, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

தற்போது மார்ச் 4 ஆம் தேதி அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று எஸ்.பி.ஐ. வங்கி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாக பயன்படுத்தி, இதுவரை செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்யும் பாஜக அரசை கண்டித்து திருச்சி பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில், பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் பென்னட் அந்தோணிராஜ் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Trichy

Trichy

இதில் அமைப்பு சாரா மாநில தலைவர் மகேஸ்வரன், மாநில சிறுபான்மை பிரிவு துணைதலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநகர் பொருளாளர் முரளி,  AICC தேசிய ஒருங்கிணைப்பாளர் சோசியல் மீடியா அப்துல் ரஹீம்,மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஷீலா செலஸ், கலை பிரிவு மாநில துணைதலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட துணை தலைவர் சத்யநாதன், பொன்னன், வக்கீல் சரவணன்,  எஸ்.வி.பட்டேல், அபுதாஹிர், மாவட்ட பொது செயலாளர் செல்வரெங்கராஜன், செல்வரெங்கராஜன், ஆடிட்டர் சுரேஷ், இருதயராஜ், ராஜா, செயலாளர்கள் பாலசுப்ரமணியம், பாலமுருகன், பூக்கடை பன்னீர், ஹக்கீம் கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல், பாக்கியராஜ், வெங்கடேஷ் காந்தி, எட்வின் ராஜ், உறையூர் கிருஷ்ணா, மார்க்கெட் சம்சு, தர்மேஷ், அழகர், மணிவேல், இஸ்மாயில் , கனகராஜ், பாலசந்தர், திருச்சி ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், மனித உரிமை துறை மாவட்டத்தலைவர் எஸ் ஆர் ஆறுமுகம்,  அமைப்புசாரா மாவட்டத்தலைவர் மகேஷ், பட்டதாரி பிரிவு மாவட்டத்தலைவர் ஜே ஜே ரியாஸ், ஆழ்வார் தோப்பு பஷீர், வார்டு தலைவர்கள் பகதூர்ஷா, ரோஷன், மாரி, மோகன், மார்ட்டின் ,குமரேசன், டி ரவி,அபுதாகிர் முகமது, ரஃபீக், பரமசிவம், ஆபிரகாம், அப்துல் மஜீத், எஸ் சுப்புராஜ்,நவீன் மணி, RTI மாவட்ட தலைவர்  BHL மணி, பிச்சைமுத்து, அந்தோணி, மஞ்சுளா, பிரவீன், கோவிந்தன், மகேஷ், பொன்னுச்சாமி, சந்திரசேகர், சங்கர் ,விஜயகுமார், கலா, ஸ்ரீ ரங்காயி, லஷ்மி அம்மாள், பார்வதி, குமரேசன், பழனியம்மாள், பாப்பாத்தி, கமலேஷ், சதீஷ், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment