கோவை துடியலூர் அருகில் உள்ள விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.
வீட்டில் அவரது மனைவி கார்த்திகா(52) மற்றும் மகள் அர்ச்சனா(18) ஆகியோர் உள்ளனர். அர்ச்சனா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்கு குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது வாட்டர் ஹீட்டர்ரில் ஏற்பட்ட திடீர் மின்சாரம், பக்கத்தில் இருந்த தண்ணீரில் பட அதன் மூலம் எலக்ட்ரிக் ஷாக் அடித்து உள்ளது. எலக்ட்ரிக் ஷாக் அடித்து அர்ச்சனா சத்தம் போட சமையலறையில் இருந்த அவரது அம்மா கார்த்திகா தனது மகளை காப்பாற்ற உள்ளே வந்த போது அவருக்கும் எலக்ட்ரிக் ஷாக் அடித்தது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.இந்நிலையில் அர்ச்சனாவை அழைத்துச் செல்லும் கால் டாக்ஸிகாரர் வந்துள்ளார். அவர் காலிங் பெல் மற்றும் செல்போன் மூலம் அழைத்தும் அவர்கள் போன் எடுக்காததால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பாத்ரூமில் அவர்கள் இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

உடனடியாக மின்சாரத்தை துண்டித்தவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாய் மற்றும் மகள் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: கோவை, ரஹ்மான்