By: WebDesk
September 29, 2019, 3:36:13 PM
ரெயில்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும், விபத்து போன்றவைகள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காகவும் தஞ்சை-திருச்சி பொன்மலை இடையே 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழி பாதையாக மாற்றியது தென்னக ரயில்வே. மேலும், திருச்சி-தஞ்சை- காரைக்கால்- நாகை-வேளாங்கண்ணி இடையிலான 156 கி. மீ. தொலைவுள்ள ரெயில் பாதையையும் மின்மயமாக்கத் திட்டமும் விரைவாகப்பட்டது.
இந்நிலையில், திருச்சி-தஞ்சாவூர் இடையிலனா சிறப்பு சோதனை ஓட்டத்தில் ஓடிய மின்சார ரயில் 110 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்தது. பகல் 12.20 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் மதியம் 1 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு சென்றடைந்தது.
டீசல் வண்டியைக் காட்டிலும் எலெக்ட்ரிக் ரயிலின் வேகம் அதிவேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த முயற்சியால், திருச்சி-தஞ்சாவூர் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் கணிசமான முறையில் குறைக்கப்பட்டதுடன், தொழில்செய்வோருக்கும் , அன்றாட மக்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Electric train between tanjore and trichy 110km hr elctric train trichy tanjore