சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு சென்ற மின்சர ரயில் தீடீரென கட்டுப்பாட்டை இழந்து தரம்புரண்டு நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு இன்று (ஏப்ரல் 24) மதியம் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படி, மின்சார ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரும்போது, திடீரென ரயில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று ரயில்நிலைய நடைமேடை மீது மோதி தடம்புரண்டு நடைமேடை மீது ஏறி அங்கே இருந்த கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்சார ரயில் வேகமாக வந்து நடைமேடை மீது ஏறியதைப் பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ரயில் விபத்தில் நல்லவேளையாக, ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயி சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநருக்கு லேசான் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானதை அறிந்து, ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். ரயில் ஓட்டுநர் பவித்ரன் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது: அதில் “சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான புறநகர் ரயிலில் இருந்து ஓட்டுநர் கீழே குதித்து தப்பினார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளான ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. விபத்துக்குள்ளான ரயில் மோதியதில் 1வது நடைமேடை சேதமுற்றாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புறநகர் மின்சார ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளின் உயர்நிலை குழு ஆய்வு செய்து விசாரணை நடைபெறும். விபத்துக்குள்ளான ரயிலின் சேதமுற்ற 2 பெட்டிகள் தவிர இதர பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.