திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து சேலம் புறவழிச்சாலை வழியாக நாமக்கல் நோக்கி சென்ற கன்டெய்னா் லாரி மீது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் தப்பிய நிலையில், கன்டெய்னருக்குள் இருந்த இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள், டயா்கள் தீப்பிடித்து எரிந்தன.
தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. இதுதொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் முசிறி-சேலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்