பேருந்து நிலையத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் மின் இணைப்பு சாதனங்கள்: பொதுமக்கள் அச்சம்

திருச்சி துறையூர் பேருந்து நிலையத்தில் ஆபத்தான முறையில் மின் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

திருச்சி துறையூர் பேருந்து நிலையத்தில் ஆபத்தான முறையில் மின் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
There are dangerous electrical connections at duraiyur bus stand

துறையூர் பேருந்து நிலையத்தில் ஆபத்தான முறையில் மின் இணைப்புகள் உள்ளன

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ளே நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு துறையூர் மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னிணைப்பானது பேருந்து நிலையத்தில் கிழக்கே வடக்கு மற்றும் தெற்க்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாதந்தோறும் கணக்கீடு மின் இணைப்பு கணக்கீடு செய்வதற்காக ரீடிங் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் அருகையே பீஸ் கேரியர் அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் அமைந்துள்ளது ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியாக கணக்கீடு செய்வதற்காக மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இங்கு பயணிகள் வந்து வசதியாக நிற்பதற்காக அகலமான இடவசதி அமைந்துள்ளதால், மாலை நேரத்தில் வெளியூர் செல்லும் பள்ளிக்கூடம் மாணவ மாணவிகள் அங்கு நிற்பது வழக்கம், பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் மாணவர்கள் விளையாடுகின்றனர்.

ஆனால் அவர்கள் கைக்கு எட்டும் உயரத்தில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருப்பதால் எதிர்பாராத விதமாக மாணவர்கள் கை மீது படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், சமூக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின் ரீடிங் சுவிட்ச்சை பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்றும், அதை முறையாக வணிக வளாகத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்கள் பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: