Advertisment

கிராம நிர்வாக அலுவலரின் ஆவணங்களை போலியாக தயாரித்து மின் இணைப்பு: திருவெறும்பூரில் பரபரப்பு

பட்டா, சிட்டா, வரைபடம் பதிவு பெற்ற எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் மின்னிணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் எழுதியதாக ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தி மின் இணைப்பு வழங்கலாம் என்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
minister Senthil Balaji, monthly electricity bill calculation, மின் கட்டணம், மாதந்திர மின் கட்டணம், மின் கட்டணம் எப்படி குறையும், அமைச்சர் செந்தில் பாலாஜி, monthly electricity calucalation reading, tamil nadu, eb bill

திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் சான்றை போலியாக தயாரித்து மின் இணைப்பு பெற்றவர்கள் மீதும், மின் இணைப்பு வழங்க பரிந்துரைத்த நவல்பட்டு இளநிலை பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூரை சேர்ந்தவர் அந்தோணி துரை. இவர் சோழமாதேவி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். 

Advertisment

இந்நிலையில் சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரா, சம்சாத் பேகம், அப்துல் ரகுமான், மும்தாஜ், பிரேமா, சாமிநாதன், தஸ்ஸுன் ஆகிய 7 பேர் புதிதாக தங்களது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக அந்தோணி துரை நில உடமை சான்று  கொடுத்தது போன்று அந்தோணி துரைக்கு தெரியாமல் போலியாக சான்று தயாரித்து மின் இணைப்பு பெற்றுள்ளனர். இச்சம்பவம் அந்தோணி துரைக்கு தெரிய வரவே அவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இது குறித்து வி.ஏ.ஓ அந்தோணி துரை கூறுகையில், சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்ற கொண்ட நாள் முதல் சோழமாதேவி ஊராட்சி  அம்பேத்கார் நகர் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கோரிக்கைபடி பட்டா மாற்றம், நில உரிமைச் சான்று போன்றவை வழங்க இயலாது என என்னால் மறுக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் தமக்குரிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டுமானால் அவர்களுக்கு உரிய கிரைய ஆவணம், சிட்டா, அடங்கல்,  பட்டா போன்றவை பயன்படுத்தியும் மற்றும் வீட்டு வரி, நில வரைபடத்தை கொண்டும் மின் இணைப்பு பெற வேண்டும். 

நவல்பட்டு இளநிலை பொறியாளர் எதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சான்றை ஒரு ஆவணமாக பயன்படுத்தி புதிய மின் இணைப்பு வழங்க முன் வந்தார் என்பது ஒரு புதிராக உள்ளது.  பட்டா,  சிட்டா, வரைபடம் பதிவு பெற்ற எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் மின்னிணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் எழுதியதாக ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தி மின் இணைப்பு வழங்கலாம் என்பது தவறான செயல்களுக்கு வழி வகுக்க முன்னுதாரணம் ஆகி விடும். 

மேற்கண்ட நபர்கள் மின் இணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற அறிவுறுத்தியது யார்?  அதன் பெயரில் பொது மக்களில்  சிலர் தவறான ஒரு போலியான கிராம நிர்வாக அலுவலர் சான்று தயாரித்தது எப்படி? என்றும், அதை தயாரித்து அளித்த நபர் யார்? எனவும் மேலும் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று வர கூறிய நவல்பட்டு மின்சாரம் வாரியம் இளநிலை பொறியாளர் மீதும் போலியான சான்று வழங்கிய நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாவல்பட்டு காவல் நிலையத்தில் தமது மேலதிகாரிகளின் ஆலோசனையின்படி புகார் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.  இவரது புகார் குறித்து நவல்பட்டு போலீசார் தற்போது விசாரணையை துவக்கி இருக்கின்றனர். அரசு அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த பகிரங்க மோதல் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment