கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து தாய்முடி எம்.டி. பகுதி உள்ளது. இங்கு துளசி மகளிர் சுய உதவி குழு நியாய விலை இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் இருக்கும்.
Advertisment
இந்நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் அப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் ரேஷன் கடையில் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த மக்கள் 13க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக மக்கள் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறைக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர் சத்தம் எழுப்பி யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அனுப்பினர். யானைகள் 5-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை இழுத்து சூறையாடியது. உடனடியாக மக்கள் விரட்டியதால், மீதமுள்ள அரிசி மூட்டைகள் தப்பின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“