கோவை மாவட்டத்தில், உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் நுழைந்த காட்டு யானை, ஒரு வீட்டின் கதவை உடைத்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டம், மருதமலை ஐ.ஓ.பி. காலனி பகுதிக்குள் நேற்று நள்ளிரவு ஒரு காட்டு யானை குட்டியுடன் உலா வந்தது. அப்போது, அங்கிருந்த வீட்டிற்குள் நுழைந்த யானை, உணவுகளை தேடியுள்ளது.
மேலும், வீட்டின் கதவை உடைத்த யானை, தனது தும்பிக்கையால் உணவு பொருள்கள் ஏதேனும் கிடைக்கிறதா எனத் தேடிப்பார்த்தது. இந்நிலையில், வீட்டில் இருந்தவர்கள் யானையின் சத்தம் கேட்டு மாடியறையில் தஞ்சம் புகுந்தனர்.
இச்சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் யானை வருவதால் அச்சமடைந்த பொதுமக்கள், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“