கோவை தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சக்திவேலுக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னங் கன்றுகளை சேதப்படுத்தியுள்ளது.
மேலும் அங்குள்ள சொட்டு நீர் செல்லக் கூடிய தண்ணீர் பைப்புகளையும் உடைத்து சென்றுள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“