Advertisment

குட்டி யானை மரணம்; நடிகர் சத்யராஜின் சகோதரி தோட்டத்து வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகம்

நடிகர் சத்யராஜின் சகோதரி தோட்டத்து வீட்டின் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குட்டி யானை விழுந்து உயிரிழப்பு

author-image
WebDesk
Apr 11, 2023 22:28 IST
elephant

நடிகர் சத்யராஜின் சகோதரியின் தோட்டத்து வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டி யானை மரணம்

கோவை நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழந்துள்ளது.

Advertisment

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா (சத்யராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தோட்டத்து வீடும் (farmhouse) உள்ளது. இங்கு எப்போதாவது தான் அவர்கள் வந்து செல்வார்கள் என தெரிகிறது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டமும் தென்படும்.

இதையும் படியுங்கள்: திருச்சி அரிஸ்டோ ஜங்சன் மேம்பாலம் விரைவில் திறப்பு: திருநாவுக்கரசர் எம்.பி. பேச்சு

இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து அங்கு பணிபுரிவோர் சென்று பார்க்கையில், தோட்டத்து வீட்டின் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குட்டி யானை விழுந்து உயிரிழந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த குட்டியானைக்கு 1 வயது இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வன பாதுகாவலர் ஆகியோர் விரைந்துள்ளனர். ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நாளை உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அங்கு வந்த யானைக்கூட்டத்தின் வீடியோ கிடைக்கப்பெற்றுள்ளது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Coimbatore #Elephant #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment