ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை இடையே அமைக்கப்பட்டுள்ள புலிகள் காப்பகத்தில், 5 அடி ஆழ பள்ளத்தில் பெண் யானை வெள்ளிக்கிழமை காலை தவறி விழுந்து உயிரிழந்தது.
இந்த யானை சுமார் 45 வயதுடையது என்று கூறப்படுகிறது. யானையை சறுக்கிய பள்ளம் மண் அரிப்பால் உருவாகி இருக்கிறது.
கொளுத்தும் கோடை வெப்பத்தால் புலிகள் காப்பகத்திற்குள் உள்ள பெரும்பாலான இயற்கை நீரோடைகள் வறண்டுவிட்டன. விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறையினர், வனத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகளை உருவாக்கியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தின் பீட் 1ல் உள்ள அத்திகோவில் பழங்குடியினர் குடியிருப்புக்கு அருகில், இதுபோன்ற தண்ணீருக்கான குழி அமைக்கப்பட்டது. யானை இந்த நீர்நிலையில் தண்ணீர் குடிக்க சென்றபோது, குறுகிய பாதையின் பள்ளத்தில் தவறி விழுந்தது.
யானையின் நிலையைக் கண்ட பழங்குடியினர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மேற்கண்ட நடவடிக்கைகளை முடித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil