கிருஷ்ணகிரியில் 2 பெண்களை காட்டு யானை கொன்றதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்த யானை கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்த, யானை முதலில் வசந்தம்மாவை தாக்கியது. அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த என்பவரது மனைவி இவர். இவர் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது யானை தாக்கி கொன்றுள்ளது.
இதைத்தொடர்ந்து யானை தசரப்பள்ளி கிராமத்திற்கு சென்றுள்ளது. அங்கு அஸ்வதாம்மா என்ற 45 வயது பெண்மணியை கொன்றுள்ளது. இவர் வேலைக்கு செல்ல தயாராக இருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், செம்மரப்பட்டியில் உள்ள சரக்கரபாணி மற்றும் ராம் ஸ்ரீ என்ற வட இந்திய தொழிலாளியையும் தாக்கி உள்ளது, இவர்கள் தற்போது தேன்கனிக்கோட்டை அரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பசுக்களையும் இந்த யானை கொன்றுள்ளது.
அன்னியாளம் மற்றும் தாசரப்பள்ளி கிராமத்தச் சேர்ந்த மக்கள் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தளி சி.பி.ஐ எம்.எல்.எ டி. ராமச்சந்திரன் தலைமையில் 100 மேற்பட்டவர்கள் அஞ்செட்டி சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். மேலும் யானையை விரைவாக பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. வனத்துறை சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து வந்த குழுவினர், இந்த யானையை கண்காணித்து வருகின்றனர். இந்த யானையை தற்போது தளி பகுதி காடுகளுக்குள் வனத்துறையினர் விரட்டிவிட்டுள்ளனர். இதனால் இதை எளிதாக பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“