வனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்... யானை தாக்கி பெண் பலி!

பாலமலை வரை காரில் சென்றவர்கள் அங்கிருந்து காட்டிற்குள் இறங்கி ட்ரெக்கிங் சென்றுள்ளனர்.

Elephant kills woman trekking inside Coimbatore forest : கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் பிரசாந்த். இவருடைய மனைவி புவனேஸ்வரி. கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த சில வருடங்களாக கோவையில் வாழ்ந்து வருகின்றனர். புவனேஸ்வரி சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். 19ம் தேதி காலை கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் காட்டுப் பகுதியில் ட்ரெக்கிங் செல்வதற்காக இவர்கள் மற்றும் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலமலை சென்றுள்ளனர்.

யானை தாக்கப்பட்டதில் பலியான புவனேஸ்வரி

பாலமலை வரை காரில் சென்ற அவர்கள், அங்கிருந்து காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். அந்த பகுதிகளில் காட்டு யானைகளில் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ட்ரெக்கிங் சென்ற நபர்களை நேரடியாக கண்ட யானை அவர்களை விரட்ட ஆரம்பித்தது. 9 பேர் கொண்ட குழுவில் 8 பேர் தப்பித்துக் கொள்ள புவனேஸ்வரியை யானை தாக்கியது. இதனால் புவனேஸ்வரி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து பிரசாந்த் வனச்சரகர்களை நேரில் சென்று சந்தித்து நடந்த விவகாரத்தை கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டுள்ளனர். வனத்துறையினரிடம் விசாரணை செய்த போது, இந்த 9 நபர்களும் முறையான அனுமதியை பெற்றுக் கொண்டு ட்ரெக்கிங் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க : கர்நாடகாவில் லோடு ஆட்டோவை ஓட ஓட விரட்டிய யானை – வைரல் வீடியோ

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close