கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி வனத்துறை வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது.
மக்னா யானைக்கு ரேடியோ காலர் ஐடி(சேட்லைட்) பொருத்தப்பட்டுள்ளதால் யானை நடமாட்டத்தை வனத்துறை அமைத்துள்ள தனி குழுவும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால் குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறை உயர் அதிகாரி உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில்,
/indian-express-tamil/media/post_attachments/b31465ba-be6.jpg)
மூன்று மாதங்களாக தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் நடமாடி வந்த மக்னா வால்பாறை விட்டு இடம்பெயர்ந்த மக்னா பொள்ளாச்சி வனச்சரகம் வில்லோனி நாகமலை பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியின் போது மக்னா யானை உயிரிழந்தது தெரியவந்தது.
/indian-express-tamil/media/post_attachments/a9a1b02e-b06.jpg)
இதை அடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில் நாளை கால்நடை மருத்துவர்கள் கொண்டு பிரதபரி சோதனை செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர், மக்னா யானை உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“